தலைநகர் டெல்லியில் தாமதமாக தென்மேற்கு பருவமழை துவங்கியதை அடுத்து பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
டெல்லியில் வழக்கமாக ஜூன் 27-ந் தேதி பருவமழை தொடங்கும். இந்த ஆண்டு வழக்கத்திற்கு முன்னதாக ஜூன் 15-ந் தேதியே பருவமழை தொடங்கும் என வானிலை மையம் கணித்திருந்தது.
ஆனாலும், கணிப்புகளை பொய்யாக்கி வழக்கமாக தொடங்கும் நாளை விட 15 நாள் தாமதாமாக பருவமழை தொடங்கியுள்ளது. இதனையடுத்து, டெல்லியின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருவதால் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
டெல்லியை ஒட்டியுள்ள பரீதாபாத், குர்கான் போன்ற பகுதிகளிலும் கனமழை பெய்தது.