விஷ்ணு விஷால் நடிப்பில் ராம்குமார் இயக்கத்தில் கடந்த 2018-ம் ஆண்டு திரைக்கு வந்த ராட்சசன் படத்துக்கு விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வரவேற்பு கிடைத்தது.
தமிழில் ஹிட்டான இந்த படம் மற்ற மொழிகளிலும் ரீமேக் செய்தனர், தெலுங்கு ரீமேக்கில் பெல்லம்கொண்டா சீனிவாஸ் நடித்திருந்தார்.
ராட்சசுடு என்ற பெயரில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான இப்படம் அங்கு மிகப்பெரிய வெற்றி பெற்றது.
இந்நிலையில், ராட்சசுடு படத்தின் இரண்டாம் பாகம் தயாராக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். முதல் பாகத்தை இயக்கிய ரமேஷ் வர்மா, இந்த படத்தையும் இயக்க உள்ளார்.
சமீபத்தில் விஜய் சேதுபதியை சந்தித்து கதை சொன்ன ரமேஷ் வர்மா. அது ராட்சசுடு 2-ம் பாகத்துக்கான கதையாக இருக்கலாம் எனவும், அதனால் இப்படத்தில் விஜய்சேதுபதி ஹீரோவாக நடிக்க வாய்ப்புள்ளதாகவும் டோலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது.