• Sun. Dec 22nd, 2024

கிளிநொச்சியில் வீதிக்கு குறுக்காக கட்டுமானம் அமைத்துள்ள படையினர்; பிரதேச சபை எடுக்கவுள்ள நடவடிக்கை

Aug 2, 2021

கிளிநொச்சி – இரணைமடு சந்தியில் வீதிக்கு குறுக்காக படையினரால் அடாத்தாக அமைக்கப்பட்டுள்ள கட்டுமானத்தை சட்டரீதியாக அகற்றுவதற்கு கரைச்சி பிரதேசபை நடவடிக்கை எடுத்துள்ளது.

இரணைமடு சந்தியில் விபத்தை உண்டாக்கும் வகையில் படையினரால் சுவர் ஒன்று சீமெந்தினால் கட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த சுவரை அகற்றுமாறு கரைச்சி பிரதேசசபையினர் கூறியிருந்தனர்.

எனினும் குறித்த கட்டுமானம் படையினரால் அகற்றப்படாமலே உள்ளது.

இதனையடுத்து சட்டரீதியாக அதனை அகற்றுவது தொடர்பாக கரைச்சி பிரதேசசபையின் தவிசாளர் அருணாச்சலம் வேழமாலிகிதன் நேரில் சென்று ஆராய்ந்துள்ளதாக கூறப்படுகின்றது.