அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு பின்னர் கொரோனா பாதிப்பு உச்சத்தை எட்டி வருகிறது.
கடந்த ஏழு நாட்களில் சராசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4.13 லட்சத்தை தாண்டியுள்ளது.
நேற்றைய தினம் தினசரி பாதிப்பில் புதிய உச்சமாக, 10 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதே சமயம் அமெரிக்க மாகாணங்களில் ஒமைக்ரான் பாதிப்பும் வேகமாக அதிகரித்து வருகிறது.
குறிப்பாக நியூ ஜெர்சி மாகாணத்தில் ஒரே வாரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை 76 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இது குறித்து பேசிய அந்த மாகாணத்தின் மேயர் ஃபில் மர்ஃபி கூறுகையில், கடந்த 6 தினங்களில் மட்டும் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஒமைக்ரான் சுனாமி ஏற்கனவே மருத்துவ பணியாளர்களைத் தாக்க தொடங்கி விட்டதாகவும் தெரிவித்தார்.
அத்துடன், கடந்த 1 வருடத்தில் இல்லாத அளவு கொரோனா தொற்று எண்ணிக்கை ஒமைக்ரானால் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.