ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது.
இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா 8 விக்கெட் இழப்பிற்கு 416 ரன்கள் குவித்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.
பின்னர் இங்கிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கி இங்கிலாந்து அணி விளையாடி வந்தது .இன்றைய 3-வது நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங் செய்து கொண்டிருந்தார்.
16 ரன்கள் எடுத்திருக்கும்போது, ஆஸ்திரேலியாவின் கேமரூன் க்ரீன் வீசிய பந்தை எதிர்கொண்ட பென் ஸ்டோக்ஸ் அந்த பந்தை ஆடாமல் விட்டார். பந்து ஆஃப் ஸ்டம்பில் பலமாக உரசி சென்றது .
ஆனால், ஸ்டம்ப் மேலிருந்த ‘பெய்ல்’ கீழே விழவில்லை. ஆஸ்திரேலிய வீரர்கள்ம் எல்.பி.டபிள்யூ அப்பீல் கேட்க நடுவரும் அவுட் கொடுத்துவிட்டார்.
ஆனால், பென் ஸ்டோக்ஸ் ரிவியூ கேட்டார். அப்போது 3-வது நடுவர் அவுட் இல்லை என அறிவித்தார்.
அந்த ரிவியூவில் ஸ்டம்ப் மேலிருந்த ‘பெய்ல்’ கீழே விழவில்லை என தெரியவந்தது .இது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
பென் ஸ்டோக்ஸ் கூட இதை எதிர்பார்க்கவில்லை. இதை பார்த்த ஸ்டோக்ஸ் சிரித்து கொண்டார் . ஆஸ்திரேலிய வீரர்கள் அனைவரும் ஏமாற்றம் அடைந்தனர்.
இது குறித்து பந்து வீச்சாளர்களிடம் நியாயமாக நடந்துகொள்வோம் என்று கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் டுவிட்டரில் நகைச்சுவையாக பதிவிட்டு உள்ளார்.