• Tue. Dec 3rd, 2024

இந்தியாவில் கொடூரம்; 8 பேர் உயிருடன் எரித்து கொலை!

Mar 22, 2022

மேற்கு வங்காள மாநிலம் பீர்பூம் மாவட்டம் ராம்பூர்ஹத்தில் உள்ள பர்ஷல் கிராமத்தின் துணைத் தலைவராக இருந்தவர் பாது ஷேய்க். இவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்.

நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் வந்த நான்கு பேர் ஷேய்க் மீது வெடிகுண்டு வீசி பயங்கர தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த பாது ஷேய்க் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது உடல் சொந்த ஊரான போக்டுய் கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இவரது கொலை காரணமாக அந்த கிராமத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. ஒரு கும்பல் வன்முறையில் ஈடுபட்டது.

போக்டுய் கிராமத்தில் உள்ள வீடுகளை சூறையாடிய நிலையில், ஆத்திரமடைந்த கும்பல் பல வீடுகளுக்கு தீ வைத்தது, அதில் சுமார் 10 பேர் உயிருடன் எரித்து கொல்லப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், 8 பேர் பலியாகினர் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒரே வீட்டில் இருந்து 7 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்துக்கு பாஜக கண்டனத்தை தெரிவித்து மம்தா பானர்ஜி அரசுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகிறது.

இதற்கிடையே, மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி, தேவையற்ற அறிக்கைகளை வெளியிடுவதை கவர்ன