உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த், இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரஜினியின் உடல்நிலை சீராகி வரும் நிலையில், அவர் வீடு திரும்புவது குறித்த தகவல் இன்று மாலை வெளியாகும் என கூறப்படுகிறது.
தலைசுற்றல் ஏற்பட்ட நிலையில், சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரஜினிக்கு, மூளைக்கு செல்லும் ரத்தக்குழாயில் பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டு, அது வெற்றிகரமாக சரிசெய்யப்பட்டது.
இந்நிலையில் சிறப்பு மருத்துவ குழுவினர் ரஜினிகாந்தின் உடல் நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.