• Fri. Dec 6th, 2024

டாக்டர் பட்டம் பெற்ற சிம்பு

Jan 12, 2022

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்பு செய்த சாதனைக்காக அவருக்கு வேல்ஸ் பல்கலைக்கழகம் சார்பாக டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

இந்த பட்டத்தை தயாரிப்பாளரும், கல்வியாளருமான ஐசரி கே.கணேஷ் சிம்புவுக்கு வழங்கினார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதன் பின்னர் சிம்பு தனது அம்மா அப்பாவை சந்தித்து ஆசி பெற்றார். அவரது அப்பா டி.ராஜேந்தர் மற்றும் அமா உஷா ராஜேந்தர் இருவரும் சிம்புவை ஆரத்தழுவி முத்தமிட்டனர்.

மேலும் டாக்டர் பட்டமானது, எம்.ஜி.ராமசந்திரன், சிவாஜி கணேசன், கமல்ஹாசன், விக்ரம், விஜய் உள்ளிட்ட பல கலைஞர்கள் கவுரவிக்கப்பட்ட நிலையில், தற்போது நடிகர் சிம்புவுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தக் காட்சிகள் புகைப்படங்களாக சமூக வலைதளங்களில் பரவி பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.