• Sun. Mar 16th, 2025

தேர்தல் வல்லுநர் பிரசாந்த் கிஷோருடன் நடிகர் விஜய் ரகசிய சந்திப்பு?

Mar 15, 2022

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார்.

தமிழகத்தில் அண்மையில் நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் போட்டியிட்டு ஒரு சில இடங்களில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியானது நடிகர் விஜயின் அரசியல் வருகைக்கு முக்கிய பங்கு அளிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

இவ்வாறு எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பிரபல தேர்தல் வல்லுநர் பிரசாந்த் கிஷோரை நடிகர் விஜய் ரகசியமாக சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இது பற்றி எந்தவித புகைப்படங்களும் வெளியாகவில்லை.

இந்த நிலையில், தேர்தல் வல்லுநர் பிரசாந்த் கிஷோரை நடிகர் விஜய் சந்திக்கவில்லை என்று விஜய் தரப்பு விளக்கம் அளித்துள்ளது.

தற்போது விஜய் சென்னையில் இல்லை எனவும் விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் தேர்தல் வல்லுநர் பிரசாந்த் கிஷோரை நடிகர் விஜய் சந்தித்தாக இருந்த சர்ச்சைக்கு விஜய் தரப்பில் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.