• Sat. Aug 20th, 2022

ரஷ்யாவில் 5,000 கி.மீ பயணம் செய்த அஜித்! இணையத்தில் வைரல்

Sep 3, 2021

நடிகர் அஜித் ரஷ்யாவில் பைக்குடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

ரஷ்யாவில் நடைபெற்று வந்த ´வலிமை´ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இதனையடுத்து நடிகர் அஜித் இந்தியா திரும்பினார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதால் படம் நவம்பர் அல்லது டிசம்பர் மாதங்களில் வெளியாகலாம் அல்லது அடுத்த வருடம் நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்துடன் பொங்கல் தினத்தை முன்னட்டு வெளியாகலாம் என கூறப்படுகிறது.

கடைசியாக கடந்த 2014 ஆம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு ஜில்லா மற்றும் பீஸ்ட் திரைப்படங்கள் வெளியாகியிருந்தது.

அப்படி இரண்டு படங்களும் ஒரே தினத்தில் வெளியானால் திரையரங்குகளில் திருவிழா போன்று காட்சியளிக்கும். கரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த திரையரங்குகள் புத்துயிர் பெறும் உறுதி.

இந்த நிலையில் ´வலிமை´ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததையடுத்து நடிகர் அஜித் ரஷ்யாவில் 5,000 கி.மீ பயணம் செய்துள்ளதாக தகவல் பரவி வருகிறது.

அத்துடன் பைக்குடன் நடிகர் அஜித் இருக்கும் புகைப்படமும் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.