• Mon. Nov 4th, 2024

மற்றுமொரு சீரியல் நடிகை தற்கொலை; பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்

Sep 30, 2021

கன்னட சீரியல் நடிகை செளஜன்யா தற்கொலை செய்துக் கொண்டது கன்னட திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை சௌஜன்யா பெங்களூருவில் உள்ள கும்பல்கோட்டில் தனது அடுக்குமாடி குடியிருப்பில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ஆரம்ப விசாரணையில், நடிகை தனது அறையில் தொங்குவதை பார்த்து, கதவை உடைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் அடையாளங்களில் ஒன்றாக அவர் தனது காலில் பச்சை குத்தியிருப்பதையும் பொலிசார் குறிப்பிட்டனர்.

தனிப்பட்ட வாழ்க்கையில் செளஜன்யா ஏதேனும் கஷ்டங்களை கொண்டிருந்தாரா என கண்டுபிடிக்க பொலிஸார் முயற்சிப்பதாகவும், இதுகுறித்து குடும்பத்தினரிடமும், சக ஊழியர்களிடமும் விசாரித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை நடிகை எழுதிய மரணக்குறிப்பையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

அதில் இந்த முடிவுக்கு வேறு யாரையும் குற்றம் சாட்டவில்லை என்றும், அவரது தற்கொலைக்கு அவர் மட்டுமே பொறுப்பு என்றும் அந்த குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

அதோடு தனக்கு உதவிய அனைவருக்கும் நன்றி என்றும் அவர் தனது மரண குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

செளஜன்யா ஒரு சில தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் ஓரிரு படங்களில் நடித்துள்ளார். அவர் தன் உயிரை மாய்த்துக் கொள்ள வாழ்க்கையில் சந்தித்த பிரச்சனைகள் என்ன என்பதைப் புரிந்துகொள்ள காவல்துறை, செளஜன்யாவோடு சேர்ந்து வேலை செய்தவர்களிடம் விசாரனை நடத்தி வருகின்றது.