• Wed. Dec 4th, 2024

பிக்பாஸ் அபிநய் மற்றும் மனைவி விவாகரத்தா???

Jan 5, 2022

ஜெமினி கணேசன் – சாவித்ரியின் பேரன் அபிநய், கணித மேதை ராமானுஜரின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நாயகனாக நடித்துள்ளார். இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அபிநய்யை ரசிகர்களிடம் அறிமுகப்படுத்தும்போது ஜெமினி கணேசன் – சாவித்ரி குறித்த தனது நினைவுகளை ரசிகர்களிடையே கமல்ஹாசன் பகிர்ந்துகொண்டார்.

அபிநய்யிற்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தை உள்ளது. இதனையடுத்து பிக்பாஸ் வீட்டில் பாவனியுடன் அவர் நெருங்கி பழகிய விதம் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஒருமுறை ராஜு, அபிநய்யிடம், நீ பாவனியை காதலிக்கிறாயா என கேள்வி எழுப்பினார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பாதியில் வெளியேறினார் அபிநய். அவரது மனைவி அவரை எப்பொழுதும் ஆதரிப்பதாக பதிவிட்டிருந்தார். இந்த நிலையில் அவரது மனைவி அபர்னா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது பெயரை அபர்னா அபிநய் என்பதில் இருந்து திடீரென அபர்னா வரதராஜன் என மாற்றியுள்ளார்.

இதனால் இருவரும் விவாகரத்து செய்துகொள்ளவிருப்பதாக சர்ச்சை உருவானது. இருப்பினும் இருவரும் இதுகுறித்து விளக்கமளிக்கவில்லை.