• Sun. Feb 16th, 2025

தங்கக் கடத்தல் வழக்கில் வசமாக சிக்கிய பிக்பாஸ் போட்டியாளர்

Feb 5, 2022

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அக்சரா ரெட்டி, ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பால் 84 நாட்கள் வரை பிக்பாஸ் வீட்டில் தாக்குபிடித்தார். தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் தன்னுடன் கலந்துகொண்ட வருணுக்கு ஜோடியாக ஒரு படத்தில் அக்ஷரா நடிக்கவிருக்கிறார்.

இந்த நிலையில் அக்சரா தங்கக் கடத்தல் வழக்கில் கோழிக்கோட்டில் அமலாக்கத்துறையினரால் நேற்று(04) விசாரணைக்கு உடப்படுத்தப்பட்டார்.

கடந்த 2013 ஆம் கொச்சின் விமான நிலையத்தில் ஆண்டு இரண்டு புர்கா அணிந்த பெண்கள் 20 கிலோகிராம் தங்கம் கடத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஃபைஸ் என்பவர் முக்கிய குற்றவாளியாக இருக்கிறார்.

இந்த வழக்கில் அக்சரா ரெட்டிக்கு தொடர்பு இருப்பதாக அமலாக்கத்துறையினர் சந்தேகிக்கின்றனர். இதுதொடர்பாக அவரிடம் விசாரணை நடைபெற்றது. முன்னதாக ஃபைஸிடம் நடைபெற்ற விசாரணையில் அவருக்கு திரைத்துறையினருக்கு சம்பந்தம் உள்ளதாக தெரியவந்திருக்கிறது.

இந்நிலையில் அக்சரா ரெட்டியின் உண்மையான பெயர் ஸ்ராவ்யா சுதாகர் என்றும் தங்கக் கடத்தல் வழக்கில் மாட்டிக்கொண்டதால் தன்னுடைய பெயரை மாற்றிக்கொண்டதாகவும், அவர் பிக்பாஸில் கலந்துகொண்ட போது தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.