• Mon. Oct 18th, 2021

பிக்பாஸ் வின்னர் திடீர் உயிரிழப்பு; பேரதிர்ச்சி

Sep 2, 2021

பிக்பாஸ் சீசன் 13 (ஹிந்தி) நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் மற்றும் பிரபல சின்னத்திரை நடிகருமான சித்தார்த் ஷுக்லா திடீரென உயிரிழந்துள்ளமை பேரதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

40 வயது மட்டுமே ஆகியுள்ள நடிகர் சித்தார்த் ஷுக்லா மாரடைப்பு காரணமாக மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சித்தார்த் ஷுக்லா பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளதோடு பிக்பாஸ் 14 சிறப்பு விருந்தினராக இரண்டு வாரம் வந்துள்ளார்.

இவரின் மறைவு அவரின் ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த திரையுலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.