• Sun. Dec 8th, 2024

தம்பி ராமையா மற்றும் மகன் மீது பொலிஸில் புகார்!

Jan 4, 2022

தமிழில் பல படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து பெயர் பெற்றவர் தம்பி ராமையா.

இவரது மகன் உமாபதி ராமையா. இவர் நடிப்பில் சமீபத்தில் தண்ணி வண்டி என்ற திரைப்படம் வெளியானது.

இப்படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது.
இந்நிலையில் தண்ணி வண்டி படத்தின் தயாரிப்பாளர் சரவணன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் சரவணன் பேசும்போது, கடந்த 2015 ஆம் ஆண்டு ஒரு படம் தயாரிக்க உத்தேசித்து இருந்தபோது தம்பி ராமையா தன்னை அணுகி தன்னுடைய மகனான உமாபதி ராமையா என்பவரை நடிகராக நடிக்க வைத்தால் அனைத்து பொறுப்புகளையும் தானே ஏற்று அதை நல்ல முறையில் விளம்பரம் செய்து தன் மகனை வைத்து ஒத்துழைப்பு கொடுத்து சிறந்த முறையில் படத்தை வெற்றி பெற வைப்பதாக வாக்குறுதி அளித்தார்.

அதன்படி திரைப்பட நடிகர் உமாபதி ராமையாவை வைத்து தண்ணி வண்டி என்ற திரைப்படத்தை கடந்த 2015ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஆரம்பம் செய்தேன்.

அதன்படி 2020ஆம் வருடம் ஜனவரி மாதம் படத்தை நல்லபடியாக முடித்து விட்டு ரிலீஸ் செய்வதற்கு மேற்படி ஹீரோவாக நடித்த உமாபதி ராமையா என்பவரை பலமுறை அழைத்தும் அவர் வரவில்லை.

வேண்டுமென்றே தன்னை கஷ்டப்படுத்த வேண்டும் என்று நோக்கத்துடன் இவரும் இவருடைய தகப்பனார் இணைந்து கூட்டு சதி செய்து திட்டமிட்டு எனது படத்தை தோல்வியாக்க வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தில் செயல்படுகிறார்.

மேலும் தன்னை ராமையா மற்றும் உமாபதி ராமையா என்பவர் மிரட்டல் விடுத்து வருகின்றனர்’ என்றார்.