• Wed. Dec 4th, 2024

நடிகை குஷ்புவிற்கும் கொரோனா!

Jan 10, 2022

நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்புவிற்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

நேற்று மாலை வரை தொற்று முடிவு நெகடிவ் என வந்ததாகவும், திடீரென ஏற்பட்ட ஜலதோஷத்தை அடுத்து மேற்கொண்ட பரிசோதனையில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாகவும் குஷ்பு தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் அவர் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.