• Wed. Dec 4th, 2024

பிரபல நடிகருக்கு கொரோனா

Jan 6, 2022

உலகம் முழுவதும் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் தற்போது சினிமா துறையினர் கொரோனாவால் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. சமீபத்தில் நடிகர் கமல், வடிவேலு உள்ளிட்ட பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று திரும்பினார்கள்.

இந்நிலையில் நடிகர் அருண் விஜய் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்து இருக்கிறார். தற்போது அவர் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டிருப்பதாகவும், மருத்துவர் அட்வைஸ்படி அனைத்து பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்றி வருவதாக அவர் கூறி இருக்கிறார்.

மேலும் அனைவரின் அன்புக்கும் நன்றி, அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என அவர் ட்விட் செய்து இருக்கிறார்.