• Wed. Apr 17th, 2024

தாமதப்படுத்தப்படும் பீஸ்ட் ப்ரமோஷன் – காரணம் வெளியானது

Mar 31, 2022

நெல்சன் இயக்கி விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘பீஸ்ட்’ திரைப்படத்தின் டிரைலர் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. ‘மாஸ்டர்’ திரைப்படத்திற்கு பிறகு இளையதளபதி விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘பீஸ்ட்’. இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இந்த திரைப்படத்தை இயக்கி உள்ளார்.

இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார் .இந்த திரைப்படம் வருகிற ஏப்ரல் 13ம் தேதி வெளியாகவுள்ளது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை தொடர்ந்து அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வந்தது.

இப்படத்தில் இடம்பெறும் இரண்டு பாடல்கள் வெளியாகி அனைவரையும் கவர்ந்து ஹிட் அடித்தது.

இந்த நிலையில் ‘பீஸ்ட்’ படத்தின் டிரைலர் வருகிற ஏப்ரல் 2-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் விஜய்யின் பீஸ்ட் பட தீம் மியூசிக் ஒரு படத்தின் காப்பி என ஆதாரத்துடன் ஒரு ரசிகர் பதிவு செய்துள்ளார்.

இதற்கிடையே ப்ரமோஷன் வேலைகளில் படக்குழு ஆர்வமே காட்டாமல் இருப்பதற்கான காரணம் வெளியாகியுள்ளது.

அதாவது ஏப்ரல் 14 ஆம் தேதி யாஷின் கேஜிஎஃப் சாப்டர் 2 படம் வெளியாகிறது. இதற்கான ப்ரமோஷன்ஸ் மற்றும் பிரஸ் மீட் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

இதனால் கேஜிஎஃப்புடன் போட்டி போட வேண்டாம் என முடிவு செய்து, கொஞ்சம் தாமதமாக ப்ரமோஷனை ஆரம்பிக்கலாம் என திட்டமிடப்பட்டுள்ளதாம். இதன் காரணமாகதான் பீஸ்ட் ப்ரமோஷன் தாமதப்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.