• Sun. Dec 8th, 2024

தெலுங்கு இயக்குனருடன் இணையும் தனுஷ்

Jan 13, 2022

தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல படங்கள் நடித்து வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே சமீபகாலமாக பெரிய அளவில் அங்கீகாரம் பெற்று வருகிறது. அது மட்டும் இல்லாமல் தனுஷ் ஹாலிவுட், பாலிவுட் மற்றும் டோலிவுட் என அனைத்திலுமே தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

சமீபகாலமாக தனுஷின் சினிமா மார்க்கெட் அதிகமாகவே உள்ளது. அந்த அளவுக்கு தனது நடிப்பின் மூலம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் தன் பக்கம் ஈர்த்து வைத்துள்ளார். சமீபத்தில் வெளியான அட்ராங்கி ரே திரைப்படமும் பெரிய அளவில் வரவேற்பை பெற்று தனுசை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றது.

தற்போது தனுஷ் ஹாலிவுட்டில் தி கிரேட் மேன் படத்தில் நடித்துவருகிறார். மேலும் டோலிவுட்டில் வாத்தி எனும் படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தில் தனுஷின் கெட்டப் வெளியாகி ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றது. இப்படத்திற்கு பிறகு தனுஷ் அடுத்து யாருடன் இணைவார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில்.

தற்போது மீண்டும் தெலுங்கில் இயக்குனரான சுகுமார் உடன் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் இவரது இயக்கத்தில் வெளியான புஷ்பா திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்திற்கு பிறகு சுகுமார் தனுஷை வைத்து இயக்குவதாக தகவல்கள் வெளியாகி வந்தன.

அதனால் தற்போது தனுஷ் ரசிகர்களும் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர். அதாவது பான் இந்தியா வெளியான புஷ்பா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தனுஷ் நடிக்கும் இந்த படமும் பான் இந்தியா படமாக உருவாக உள்ளதாக தெரிகிறது. இதனால் தனுஷ் இனி வரும் காலங்களில் இந்தியாவில் ஏராளமான ரசிகர்களை தன் பக்கம் இருப்பார் என பலரும் கூறி வருகின்றனர்.