• Sat. Jul 27th, 2024

பிரபல நடிகரின் பிறந்தநாள் – ரசிகர்கள் வாழ்த்து

Jul 28, 2021

மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் ஆவார். இவரது 35 வது பிறந்தாள் இன்று கொண்டாப்படுகிறது. இதனால் ரசிகர்கள் இணையதளத்தில் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து டிரெண்டிங் செய்து வருகின்றனர்.

துல்கர் சல்மான் இன்றைய சென்சேஷனல் ஹீரோ என்று ரசிகர்களால் அழைக்கப்படுகிறார்.

இவர் தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் ஓ காதல் கண்மணி படத்தில் ஹீரோவாக அறிமுகம் ஆனார். மலையாளம், இந்திய,தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் இவர் நடித்துள்ளார்.

இவரது நடிப்பில் அடுத்து, குரூப் சுகுமாரா குரூப் என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், நடிகர் துல்கர் சல்மானின் 35ஆம் பிறந்தநாளான இன்று அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.