• Sun. Oct 1st, 2023

லண்டனில் நடைபெற்று வரும் வைகைப்புயலின் படப்பிடிப்பு

Dec 18, 2021

வைகைப்புயல் வடிவேலு நீண்ட இடைவேளைக்கு பின்னர் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் ’நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ என்ற டைட்டில் வைக்கப்பட்ட இந்த படத்தின் பூஜை சமீபத்தில் சென்னையில் நடந்தது.

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது லண்டனில் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

லண்டனில் வடிவேலு மற்றும் இயக்குநர் சுராஜ் ஆகியோர் இருக்கும் புகைப்படம் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

வடிவேலுவின் ’நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ என்ற படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் லண்டனில் நடைபெற உள்ளதாகவும் ஒரு சில காட்சிகள் மட்டும் சென்னையில் படமாக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஓரிரு மாதங்களில் முடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.