• Mon. Oct 18th, 2021

வடிவேலுவின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

Oct 9, 2021

பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு நடிப்பில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் சுராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்க உள்ள நிலையில் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது

இந்த படத்திற்கு ’நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த படத்திற்கு ’நாய் சேகர்’ என்ற டைட்டில் வைக்க முடிவு செய்யப்பட்ட நிலையில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் சதீஷ் நடிக்கும் படத்திற்கு ’நாய் சேகர்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டதால் தற்போது வடிவேலு படத்திற்கு நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சுராஜ் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.