• Sun. Dec 10th, 2023

அட்லீயின் அடுத்த திரைப்படத்தின் ஹீரோ இவர் தான்!

Jun 11, 2021

தற்போது தமிழ் சினிமாவின் டாப் இயக்குனராக விளங்குபவர் அட்லீ. இவரின் இயக்கத்தில் வெளியான 4 படங்களுமே பிளாக் பஸ்டர் தான்.

ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அட்லீ, அதனை தொடர்ந்து தளபதி விஜய் வைத்து மூன்று படங்களை இயக்கியிருந்தார்.

இந்நிலையில் தற்போது அட்லீயின் உதவி இயக்குனர் ஒருவர் இயக்கும் படத்தில் நடிகர் ஜெய் ஹீரோவாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இப்படத்தை அட்லீயின் தயாரிப்பு நிறுவனமான A For Apple தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.