• Sun. Feb 16th, 2025

ஆரம்பமே அனல் தெறிக்கும் வலிமை டிரைலர்

Dec 31, 2021

ரசிகர்களின் பல வருட காத்திருப்புக்கு பிறகு பலத்த எதிர்பார்ப்புடன் வெளியாகியிருக்கிறது அஜித்குமாரின் வலிமை பட ட்ரெய்லர். போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கியிருக்கும் இந்தப் படத்திற்காக அஜித்தின் ரசிகர்கள் ஒரு வருடத்திற்கும் மேலாக காத்திருந்தார்கள்.

அப்படி ரசிகர்கள் எதிர்பார்த்தது போலவே வலிமை படத்தின் டிரைலர் ஆக்ஷன் கலந்த த்ரில்லராக வெளியாகியுள்ளது. டிரைலரின் ஆரம்பமே அனல் தெறிக்கிறது. அதிலும் அஜீத்தின் பைக் சாகச காட்சிகள் ஒவ்வொன்றும் ரசிகர்களுக்கு நிச்சயம் விருந்தாக அமையும்.

ட்ரைலர் ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரை பின்னணியில் கேட்கும் யுவன் சங்கர் ராஜாவின் இசை மிரட்டலாக இருக்கிறது. இதுவே படத்திற்கு மிகப்பெரிய பலத்தை கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. ட்ரைலரில் ஆக்ஷன் காட்சிகள் எவ்வளவு வெறித்தனமாக இருந்ததோ அதே அளவுக்கு அம்மா சென்டிமென்ட் காட்சிகளும் மெய்சிலிர்க்கும் வகையில் உள்ளது.

இந்த வருட ஆரம்பத்தில் இருந்து அதிகம் பேசப்பட்ட இந்த வலிமை படம் இன்னும் சில நாட்களில் திரையரங்குகளில் வெளி வர உள்ளதால் ரசிகர்கள் அனைவரும் இந்த வருட பொங்கலை தெறிக்க விட ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.