• Sun. Dec 10th, 2023

ரஜினியின் நினைவுகளை பகிர்ந்த இளையராஜா இசைஞானி!

Feb 15, 2022

இசைக்கு எல்லை என்பதே இல்லை என சொல்வார்கள். அது உண்மைதான் என்பது போல, கடந்த நாற்பத்தைந்து வருடங்களுக்கு முன் துவங்கிய இசைஞானி இளையராஜாவின் இசைப்பயணம் இப்போதுவரை ரசிகர்களின் பேராதாரவுடன் வரவேற்பு குறையாமல் தொடர்ந்து வருகிறது.

இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம், மராத்தி என பன்மொழிகளில் அவர் இசையமைத்துள்ளார். இவர் கிட்டத்தட்ட 1400-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் இளையாராஜா அவருடைய சமூக வலைத்தளப்பக்கத்தில் பழைய புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அதில் நடிகர் ரஜினிகாந்துடன் அவர் இருக்கும் பழைய படம் ஒன்றை பகிர்ந்து, ’என்றும் என்றென்றும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதனை அவருடைய ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.