• Mon. Dec 2nd, 2024

யோகி பாபுவுக்கு ஜோடியாக லட்சுமி மேனன்

Dec 17, 2021

நகைச்சுவை நடிகர் யோகி பாபு கதாநாயகனாக நடிக்கும் படங்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே செல்கிறது.

தமிழ் சினிமாவின் காமெடி பிரபலங்களான சந்தானம், பரோட்டா சூரிக்கு அடுத்து காமெடி கிங்காக வலம் வருபவர் நடிகர் யோகிபாபு. அண்மை காலமாக தமிழில் ரிலீஸ் ஆகும் பெரும்பாலான படங்களில் யோகி பாபு இல்லாத படங்களே இல்லை என்கிற அளவிற்கு தன் இடத்தை யாரும் தட்டி பறிக்காத வகையில் தன் நடிப்பு திறமையை ஒவ்வொரு படத்திலும் அதிகரித்து காட்டுகிறார்.

அந்த வகையில் அவர் நடித்த தர்மபிரபு மற்றும் மண்டேலா ஆகிய படங்கள் வெற்றியடைந்ததை அடுத்து இப்போது மேலும் சில படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

அந்த வகையில் இப்போது புதுமுக இயக்குனர் முருகேஷ் பூபதி என்பவர் இயக்கத்தில் ஒரு காதல் படத்தில் நடிக்க உள்ளாராம். இந்த படத்தில் யோகி பாபுவுக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்க உள்ளாராம்.

விரைவில் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. லட்சுமி மேனன் கடைசியாக நடித்த தமிழ்ப் படம் என்றால் அது புலிக்குத்தி பாண்டிதான்.