• Sun. Dec 8th, 2024

பீஸ்ட் படம் குறித்து கசிந்த தகவல்

Jan 4, 2022

தளபதி விஜய் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மிக பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் திரைப்படம் பீஸ்ட். இந்த படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் முற்றிலும் நிறைவடைந்தன.

தற்போது ஏப்ரல் வெளியீடு என அறிவித்துள்ளதால் அதற்கான வேலைகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. விஜய் முதற்கொண்டு அனைத்து நடிகர்களும் தங்களுடைய டப்பிங் பணிகளை முடித்து விட்டனர். தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஆரம்பத்திலிருந்தே பீஸ்ட் படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் என்ன என்பது ரகசியமாக வைக்கப்பட்டு வரும் நிலையில் சமீபத்தில் அவர் ஒரு ராணுவ அதிகாரியாக நடிப்பதாக கூறி ஒரு தகவல் வெளியானது. ஆனால் அதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பது தெரியவில்லை.

இந்நிலையில் பீஸ்ட் படத்தில் விஜய்யின் பெயர் ஏஜென்ட் சாய் வைக்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல் விக்கிபீடியா பக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது உண்மை தகவலா அல்லது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க அவர்கள் செய்த வேலையா என்பதுதான் தெரியவில்லை.

ராணுவத்தின் சீக்ரெட் ஏஜென்ட் என்ற கதாபாத்திரத்தில் விஜய் நடிப்பதாக கூறி வந்த நிலையில் அதற்கு ஏற்றார் போல் தான் இந்த பெயரும் அமைந்துள்ளது. இதனால் கண்டிப்பாக படம் முழுக்க ஆக்ஷன் காட்சிகள் தெறிக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்கிறார்கள் தளபதி ரசிகர்கள்.

இதுவரை காமெடி படங்களை எடுத்து வந்த நெல்சன் முதல்முறையாக முழுக்க முழுக்க ஒரு ஆக்ஷன் படத்தில் களமிறங்கி இருக்கிறார் என்பதே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக அதிகரித்துள்ள நிலையில் சமீபத்தில் வெளியான பீஸ்ட் படத்தின் புதிய போஸ்டர் எதிர்பார்ப்பை இரட்டிப்பாக்கி உள்ளது.