• Thu. Apr 25th, 2024

பாடகியாக அறிமுகமாகும் லாஸ்லியா!

Jul 6, 2021

சக்தி தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகப் பணி புரிந்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் அறியப்பெற்றவர் லாஸ்லியா.

செய்தி வாசிப்பாளராகப் பணியாற்றியபோதே இவருக்கு அதிக அளவில் ரசிகர்கள் இருந்தனர். அதனைத் தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3 வது சீசனில் கலந்து கொண்டார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் லாஸ்லியா விளம்பரப் படங்களில் நடித்ததோடு, ஹர்பஜன் சிங்குடன் இணைந்து ப்ரெண்ட்ஷிப் படத்திலும் நடித்து வருகிறார். ப்ரெண்ட்ஷிப் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அனைவரையும் கவர்ந்தது.

அதனைத் தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் தன்னுடன் சக போட்டியாளராகப் பங்கேற்று இருந்த தர்ஷனுடன் இணைந்து கூகுள் குட்டப்பன் திரைப்படத்தில் நடித்துச்வருகிறார்.

படப்பிடிப்பிற்கு இடையில் லாஸ்லியா அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் போட்டோக்களைப் பதிவிட்டு வருகிறார்.

இந்தச்நிலையில் தற்போது லாஸ்லியா குறித்த செய்தி ஒன்றி வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதாவது லாஸ்லியா ப்ரெண்ட்ஷிப் திரைப்படத்தின் ஒரு பாடலைப் பாடியுள்ளார்.

அறிமுகமாகும் முதல் திரைப்படத்திலேயே நடிகையானது மட்டுமின்றி பாடகியாகவும் ஆகி ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.