• Mon. Dec 2nd, 2024

குடும்பத்துடன் இந்தியாவை விட்டு வெளியேறும் மாதவன்!

Dec 20, 2021

பிரபல நடிகர் மாதவன் தனது குடும்பத்துடன் இந்தியாவை விட்டு வெளியேறி துபாயில் செட்டில் ஆக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்து வரும் முன்னணி நடிகர்களில் ஒருவர் மாதவன் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மகன் வேதாந்த் என்பவர் தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் சாம்பியன் ஷிப் பெற்றுள்ளார் என்றும் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்தியாவில் நீச்சல் குளங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது அதுவும் பல நீச்சல் குளங்கள் திறக்கவில்லை என்பதாலும் துபாய்க்கு குடியேறப் போவதாக மாதவன் சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அவ்வப்போது படப்பிடிப்புக்கு மாதவன் இந்தியா வந்து படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று முழுக்க முழுக்க மகனின் நீச்சல் பயிற்சிக்காக துபாய் செல்வதாகவும் அவர் கூறியுள்ளார்.