• Sun. Dec 8th, 2024

தனது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த முகென் ராவ்

Feb 22, 2022

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான நடிகர் முகென் ராவ், தனது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

இசையமைப்பாளர் அனிருத் பாடிய ‘மயக்கிறியே’ என்ற பாடலின் முன்னோட்டத்தை சென்னை உள்ள திரையரங்கில் சமீபத்தில் திரையிடப்பட்டது.

இப்பாடலின் முதன்மை வேடத்தை ஏற்றுள்ள பிக்பாஸ் பிரபலமான நடிகர் முகென் ராவ் ரசிகர்களிடையே திடீரெனத் தோன்றி அவர்களை ஆச்சரியப்படுத்தினார்.

ரசிகர்களின் உற்சாக ஆராவாரத்திற்கிடையே முகென் ராய் நடனமாடி அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

அவருடன் இணைந்து பார்வையாளர்களும் நடனமாடி மகிழ்ந்தனர். முகென் ராவுடன் நடிகை ஆத்மிகா இப்பாடலின் முதன்மை வேடத்தில் நடித்துள்ளார்.

முன்னணி மால் ஒன்றில் தனது மனதுக்கு பிடித்தப் பெண்ணை சந்திக்கும் இளைஞர் ஒருவருக்குள் உருவாகும் உணர்வுகளின் கலவை தான் ‘மயக்கிறியே’. அனிவீ இசையமைத்துள்ள இப்பாடலை அனிருத் பாடியுள்ளார். ஜிம்மி ரூத் இந்த இசைக் காணொலியை இயக்கியுள்ளார்.

மணிகண்டன் ஒளிப்பதிவை கையாள, அப்சர் நடனம் அமைத்துள்ளார். இப்பாடலுக்கு யூடியூப்பில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.