• Tue. Mar 19th, 2024

சமந்தா வேண்டாம் என்றதை ஏற்ற நயன்தாரா; கிடைத்த டாப் லெவல் வாய்ப்பு

Aug 2, 2021

ராஜமௌலி இயக்கத்தில், பாகுபலி என்ற படத்தில் பிரபாஸ், ரம்யா கிருஷ்ணன், ராணா, அனுஷ்கா, நாசர், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இந்த படம் தமிழ், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளில் வெளியாகி மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது.

தொடர்ந்து கடந்த 2017-ஆம் ஆண்டு இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது.

இந்த நிலையில் தற்போது பாகுபலி வெப்சீரிஸ் உருவாக்க இருக்கிறது. இதில், சிறுவயது ராஜமாதா சிவகாமி தேவி கேரக்டரில் நடிக்க பிரபல நடிகை சமந்தாவிற்கு படக்குழு அழைப்பு விடுத்துள்ளது. ஆனால் சமந்தா இந்த தொடரில் நடிக்க விருப்பமில்லை என்று நிராகரித்து விட்டாராம்.

அதன்பின்னர் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவுக்கு வாய்ப்பு சென்றுள்ளது. உடனடியாக ஒரு வார்த்தை கூட பேசாமல் நயன்தாரா இந்த சீரியலில் நடிக்க சம்மதித்து விட்டாராம்.

இந் நிலையில், இந்த சீரியலில் நடிக்க முடியாமல் போனதை நினைத்து சமந்தா வருந்துவது உறுதி என்று சினிமாத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.