• Thu. Dec 7th, 2023

ஏராளமான சம்பளம் வாங்கும் பாடகர்கள்

Nov 30, 2021

நடிகர், நடிகைகளை போலவே சினிமாத் துறையில் பாடகர்களுக்கும் ஏராளமான இரசிகர்கள் இருக்கின்றனர்.

இதன்படி அவர்கள் வாங்கும் சம்பளம் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. பாடகி ஸ்ரேயா கோஷல் ஒரு பாடலுக்கு 3 இலட்சத்தில் இருந்து மூன்றரை இலட்சம் வரை வாங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேபோல் பாடகர் சித்ஸ்ரீராம் ஒரு பாடலுக்கு 4 இலட்சம் ரூபாய் சம்பளமாக பெறுவதாகவும், பாடகி சாதனா சர்கம் 2 இலட்சம் வரை பெறுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.