• Sun. Dec 8th, 2024

வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ராகுல் பிரீத் சிங்

Jan 8, 2022

நடிகை ராகுல் பிரீத் சிங் திருமணம் குறித்து பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

தென்னிந்திய மொழிகளில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் ரகுல் பிரீத் சிங்.

நடிகை ரகுல் பிரீத் சிங்கும் நடிகரும், தயாரிப்பாளருமான ஜாக்கி பாக்னானியும் காதலிக்கின்றனர் என்ற தகவலை அவர் ஏற்கனவே பகிர்ந்திருந்தார்.

இதை தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு இவர்கள் திருமணம் செய்து கொள்ள போகிறார்கள் என்று சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நடிகை ரகுல் பிரீத் சிங் இதுகுறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

அப்போது அவர் கூறியதாவது, “தற்போது 10 படங்களில் கமிட்டாகி உள்ளேன். தொடர்ந்து அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வருகிறது.

தற்போது என்னைப்பற்றி பரவும் வதந்திகள் எதுவாயினும் அது என்னை பாதிக்காது.

நான் ஜாக்கியுடன் ஏற்பட்ட காதலை அறிவித்தேன். அதே போல எனது திருமணம் குறித்த தகவலும் நடக்கும்போது நான் அறிவிப்பேன்.

எனவே என்னை பற்றிய வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம்” என்று கூறியுள்ளார்.