நடிகர் தனுஷும் அவரது மனைவி மற்றும் ரஜினிகாந்தியின் மகளுமான ஐஸ்ர்யாவும் பிரிந்து வாழப்போவதாகக் கூறி பரஸ்பரம் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பாக இதுவரும் அவரவர் சமூக ஊடக பக்கங்களில் ஒரே மாதிரியான அறிக்கையை கையெழுத்து போடும் பகுதியில் பெயரையும் அதற்கு முன்பாக சில வார்த்தைகளை மட்டும் மாற்றிக் கொண்டு வெளியிட்டுள்ளனர்.
பிரபல இயக்குனரான கஸ்தூரி ராஜாவின் இளைய மகனான தனுஷ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை 2004 ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர்.
ஐஸ்வர்யா பல படங்களை இயக்கம் செய்தும் வருகிறார். கோலிவுட், போலிவுட், ஹோலிவுட் என பல படங்களில் நடித்து வருகிறார் தனுஷ். சமீபத்தில் கர்ணன் படத்திற்காக இவர் தேசிய விருது பெற்றார்.
தனுஷ் தற்போது ரஜினி வீட்டிற்கு அருகே போயஸ் கார்டனில் மிக பிரம்மாண்டமாக வீடு ஒன்றை கட்டி வருகிறார். விரைவில் இந்த வீட்டிற்கு கிரஹபிரவேசம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கும் யாரும் எதிர்பாராத விதமாக தனது மனைவியை பிரிய போவதாக தனுஷ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
நடிகர் தனுஷ் அவரது மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்தை விட்டு பிரிவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ”கடந்த 18 ஆண்டுகளாக நண்பர்களாக, தம்பதியாக, பெற்றோராக ஒருவருக்கொருவர் நல்ல புரிதலுடன் வாழ்ந்து வந்தோம். ஆனால் இன்று நாங்கள் ஒரு மனதாக பிரிந்து வாழ முடிவு செய்துள்ளோம். எங்களின் முடிவை மதித்து, இதனை ஏற்றுக்கொண்டு எங்களுக்கு தனி உரிமை அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.
இதேபோன்ற பதிவை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.