• Mon. Sep 9th, 2024

ரஜினிகாந்த் மருத்துவ பரிசோதனை நல்லபடியாக நடந்தது – வைரமுத்து

Jun 28, 2021

அமெரிக்கா சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த் மருத்துவ பரிசோதனை நல்லபடியாக நடந்தது என தகவல் தெரிவித்துள்ளதாக கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் ஏற்கனவே சிறுநீரக பாதிப்புக்கான சிகிச்சை செய்து கொண்டதால் அடிக்கடி அமெரிக்கா சென்று மருத்துவ பரிசோதனை செய்து வந்தார்.

அண்மையில் அண்ணாத்த படப்பிடிப்பை முடித்த நிலையில் கடந்த 19-ஆம் திகதி மீண்டும் அமெரிக்கா சென்று அங்குள்ள மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைகள் செய்து கொண்டார். மருத்துவ குழுவினர் ரஜினிக்கு பல்வேறு உடல் பரிசோதனைகள் செய்தனர்.

பரிசோதனை அறிக்கை ரஜினிகாந்திடம் வழங்கப்பட்டது. இந்த நிலையில், அமெரிக்க மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை நல்லபடியாக நடந்ததாக ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கவிஞர் வைரமுத்து டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ”அமெரிக்காவில் இருந்து ரஜினி அழைத்தார். மருத்துவ சோதனை நல்ல வண்ணம் நடந்தது என்றார். மகிழ்ந்தேன். அவர் குரலில் ஆரோக்கியம். நம்பிக்கை இரண்டும் இழையோட கண்டேன். அவரன்பர்களின் மகிழ்ச்சிக்காகவே இதை பதிவிட்டு பகிர்கிறேன்” என கூறியுள்ளார்.