ரஜினிகாந்த் நடித்து தீபாவளிக்கு வெளியாக உள்ள அண்ணாத்த படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் அண்ணாத்த. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ள நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.
இந்நிலையில் படத்தின் டீசருக்காக ரசிகர்கள் ஆவலாக காத்துள்ள நிலையில் ஆயுத பூஜையான இன்று மாலை 6 மணிக்கு டீசர் வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்திருந்த நிலையில் தற்போது டீசர் வெளியாகி வைரலாகி வருகிறது.