• Wed. Apr 17th, 2024

டாப்சி மிரட்டலான நடிப்பில் சபாஷ் மித்து; வரலாற்றை மாற்றி எழுதிய மிதாலி!

Mar 21, 2022

ஆண்களுக்கான விளையாட்டாக இருந்த கிரிக்கெட்டில் பெண்களும் சாதிக்க முடியும் என்று வரலாற்றை மாற்றி எழுதியவர் மிதாலி ராஜ்.

இவரது பயோபிக் தற்போது சபாஷ் மித்து என்ற பெயரில் உருவாகியுள்ளது. டாப்சி நடிப்பில் உருவாகியுள்ள இந்தப் படம் விரைவில் ரிலீசாக உள்ளது.

கிரிக்கெட் போட்டிகளுக்கு சர்வதேச அளவில் வெறித்தனமான ரசிகர்கள் காணப்படுகின்றனர். இரண்டு பெரிய நாடுகளின் அணிகள் போட்டியிடுகின்றன என்றால் தங்களது தினசரி வாழ்க்கையை மறந்து ரசிகர்கள் அந்த போட்டிகளை பார்ப்பார்கள். குறிப்பாக உலக கோப்பை போன்ற போட்டிகள் அதிகமான ரசிகர்களுடன் களைக்கட்டும்.

இந்தப் போட்டி ஆண்களுக்கானது என்ற பிம்பம் ஆண்டாண்டுகளாக காணப்படுகிறது. இந்த பிம்பங்களை தற்போது மகளிர் கிரிக்கெட் அணிகள் உடைத்தெறிந்து வருகின்றன. ஆனால் இதை பல ஆண்டுகளுக்கு முன்பாகவே சாத்தியப்படுத்திய பெருமை சில வீராங்கனைகளையே சேரும். அந்த வகையில் இந்தியாவின் மிதாலி ராஜூம் அந்த பட்டியலில் இடமபெற்றுள்ளார்.

ஓடிஐ கிரிக்கெட்டில் தொடர்ந்து 7 முறை அரைசதங்களை அடித்தவர் இவர். நான்கு மகளிர் உலக கோப்பை தொடர்களில் கேப்டனாக இந்திய மகளிர் அணியை வழிநடத்தியவர். டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகவும் இளம் வயதில் 200 ரன்களை குவித்தவர் என்ற பெருமையும் இவருக்குண்டு.

23 ஆண்டுகளாக இந்திய அணிக்காக இவர் விளையாடியுள்ளார். இத்தகைய பெருமைகளுக்கு சொந்தக்காரரான மிதாலி ராஜின் பயோ பிக் தற்போது சபாஷ் மிதாலி என்ற பெயரில் உருவாகியுள்ளது. இந்த படத்தில் நடிகை டாப்சி முதன்மை கேரக்டரில் நடித்துள்ளார். விரைவில் வெளியாகவுள்ள இந்தப் படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

இந்த டீசரில் மிதாலியின் பெருமைகள் அடுத்தடுத்து கூறப்படுகின்றன. தொடர்ந்து போட்டிக்கு தயாராகும் மிதாலி கேரக்டரில் நடித்துள்ள டாப்சி மற்றும் அவர் பாலை எய்ம் செய்வது என டீசர் சிறப்பாக செல்கிறது. தொடர்ந்து பாலிவுட்டில் சிறப்பான கதைக்களங்களில் நடித்துவரும் டாப்சிக்கு இந்தப் படமும் சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.