• Fri. Apr 19th, 2024

நீண்ட ஆண்டுகள் கழித்து திரையரங்கில் வெளியான சிம்பு படம்

Nov 25, 2021

நீண்ட காலம் கழித்து சிம்புவின் மாநாடு படம் திரையரங்கில் வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் மாநாடு. பல்வேறு பிரச்சினைகளால் இந்த படம் வெளியாவது தொடர்ந்து தள்ளி வைக்கப்பட்டு வந்த நிலையில் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. எனினும் நேற்று(24) ஏற்பட்ட சில பிரச்சினைகளால் இந்த படம் மேலும் தள்ளி வைக்கப்படும் நிலையும் ஏற்பட்டது.

இந்நிலையில் அனைத்து பிரச்சினைகளும் முடிந்து ஒருவழியாக படம் இன்று வெளியாகியுள்ளது. நீண்ட ஆண்டுகள் கழித்து சிம்பு படம் திரையரங்கில் வெளியாவதால் காலை முதலே ரசிகர்கள் பலர் படம் பார்க்க திரையரங்குகளில் குவிந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் திரையரங்கில் சிம்பு பெயர் வரும்போது ரசிகர்கள் கூச்சலிட்டு கொண்டாடும் வீடியோக்களும் வைரலாகியுள்ளன.