• Sun. Dec 8th, 2024

பிரபல இயக்குனருடன் இணையும் எஸ்.ஜே.சூர்யா!

Dec 30, 2021

எஸ். ஜே. சூர்யா நடிக்கும் புதிய படத்தின் இயக்குனர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும், இயக்குனராகவும் வலம் வருபவர் எஸ்.ஜே. சூர்யா. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்திற்க்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

அந்த வகையில், சமீபத்தில் வெளியான “மாநாடு” திரைப்படத்தில் இவர் நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

மேலும், இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு இவருக்கு படவாய்ப்புகள் குவியத் தொடங்கியுள்ளன. இந்நிலையில், இவருக்காக இயக்குனர் மிஷ்கின் ஒரு கதை சொல்லி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.