• Tue. Oct 15th, 2024

சமூக வலைதளங்களில் அடிபணிந்த அஸ்வின்

Dec 9, 2021

தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர் அஸ்வின். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றார். தற்போது அவர் ‘என்ன சொல்ல போகிறாய்’ என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட நடிகர் அஸ்வின் இந்த படத்திற்கு முன் தான் 40 கதைகளை கேட்டதாகவும், கதை கேட்கும் பொழுதே தூங்கி விட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

அஷ்வின் பேசிய இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் பெரும் விவாதமாக மாறியுள்ளது. நெட்டிசன்கள் பலரும் அஸ்வினுக்கு ரொம்ப திமிரு, ஓவர் பந்தா என்று விளாசி வருகின்றனர். தற்போது தான் பேசிய பேச்சுக்கு அஸ்வின் வருத்தம் தெரிவித்துள்ளார்.

இது நான் கலந்து கொள்ளும் முதல் பெரிய நிகழ்ச்சி என்பதால் நான் சற்று பதட்டத்துடன் இருந்தேன். மேலும் மேடையில் பேசுவதற்காக நான் எந்த ஒத்திகையும் பார்க்கவில்லை. என் ரசிகர்களின் அன்பை கண்டு நான் திகைத்து இருந்தேன்.

இந்த படத்திற்கு முன்பு எனக்கு கதை சொன்ன இயக்குனர்களை நான் அவமதிக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. நான் பேசிய இந்தப் பேச்சு எனக்கு பாதகமாக அமையும் என்று நினைக்கவில்லை. எந்த உள்நோக்கமும் வைத்து நான் பேசவில்லை.

பட வெளியீட்டு விழாவில் இயக்குனர் என்னை சூப்பர் ஸ்டார் என்று சொன்னது கூட சாதாரணமாகத்தான், அனைவருக்குமே தெரியும் தமிழ்நாட்டில் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான். இவ்வாறு தொடர்ந்து கிளம்பிய எதிர்ப்புகளுக்கு அஸ்வின் தன் தரப்பிலிருந்து இப்படி ஒரு விளக்கம் கொடுத்துள்ளார்.