• Sun. Nov 3rd, 2024

அடுத்தடுத்து ரிலீஸ் ஆகும் பிரபுதேவாவின் படங்கள்

Nov 18, 2021

பிரபுதேவாவின் படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆக காத்திருக்கும் நிலையில் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

தமிழ் சினிமாவில் பிரபுதேவா பிரபல நடிகராகவும், நடன இயக்குனராகவும் வலம் வருபவர். இதனையடுத்து, தற்போது இவர் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இதனிடையே, இவர் ‘பஹீரா’படத்திலும், சந்தோஷ் குமார் இயக்கும் புதிய படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், இவர் நடித்த ”பொன்மாணிக்கவேல்” திரைப்படம் நாளை மறுநாள் OTT யில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ‘தேள்’ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவும் சமீபத்தில் நடந்தது. இந்த படமும் விரைவில் வெளியாக இருக்கிறது.

இவரின் படங்கள் அடுத்தடுத்து ரிலீஸாக காத்திருக்கும் நிலையில் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.