• Tue. Mar 26th, 2024

எல்லாருக்கும் டாட்டா….கடைசி நாளை கேக் வெட்டி கொண்டாடிய ரோஷினி

Nov 15, 2021

விஜய் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் இல்லத்தரசிகளின் பேவரட் எனலாம். அந்த அளவிற்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டத்தளத்தை கொண்டுள்ளது.

டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடம் பிடிப்பதில் பாரதி கண்ணம்மா சீரியல் போட்டிபோட்டுக் கொண்டு விறுவிறுப்பான கதைக்களத்தை அமைத்து வருகிறது.

இந்த நிலையில், விறுவிறுப்புடனும், பல திருப்பங்களுடனும் ஓடிக்கொண்டிருக்கும் இந்த சீரியலில் கண்ணமாகவாக நடித்து வந்த ‘ரோஷினி ஹரிப்ரியன்’ சீரியலில் இருந்து விலகுவதாக கடந்த மாதம் அறிவித்திருந்தார்.

இந்த செய்தி பாரதி கண்ணம்மா சீரியல் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு சீரியலுக்கு மிகப்பெரிய பின்னடைவையும் ஏற்படுத்தியுள்ளது.

ஏனெனில் சீரியலில் கண்ணம்மாவாக தோன்றி ரசிகர்கள் மத்தியில் கண்ணம்மாவாகவே வாழும் நடிகை ரோஷினி ஹரிப்ரியன் சீரியலை விட்டு விலகுவதை ஏற்க முடியாது என ரசிகர்கள் மத்தியில் கருத்துக்களும் வெளியாகின.

அவருக்கு பதிலாக யார் நடிக்க போகிறார் என்ற தகவலும் வெளியாகின.

அதனை உறுதி செய்யும் விதமாக, கண்ணம்மாவாக புதிய கதாநாயகி வினுஷா தேவி நடித்துள்ள புதிய ப்ரோமோவும் வெளியானது.

வெள்ளித்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததன் காரணமாகவே பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து ரோஷினி விலகியுள்ளார் என்று தகவல் வெளியானது.

இதுகுறித்து ரோஷினியின் நண்பர்கள் வட்டாரம் தெரிவித்துள்ளதாவது, சீரியல் மூலம் ரோஷினிக்கு சினிமாவில் வாய்ப்புகள் வந்தது என்னவோ உண்மை தான்.

ஆனால், ரோஷினி அந்த வாய்ப்புகளை முதலில் ஏற்றுக் கொள்ளவில்லை. நிதானமாக யோசித்து முடிவெடுக்கலாம் என்று இருந்தார்.

இந்தநிலையில் தான் அவரை சில பெரிய பேனரில் இருந்து கேட்டு வந்தார்கள்.

அப்போது தொடர்ச்சியாக நீங்கள் சினிமாவில் படம் பண்ணலாம். ஆனால், சீரியலில் ரெண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக இருக்கிறது உங்களுடைய அடையாளத்தை சினிமாவில் குழைக்கும்.

இதனால் ஹீரோயினியாக இல்லாமல், துணை நடிகை வாய்ப்புகள் தான் வரும் என்று சொன்னார்கள். இதனால் கொஞ்ச நாளாகவே ரோஷினி குழப்பத்தில் இருந்தார்.

கடைசியில் தான் ரோஷினி இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கலாம் என்று கூறியுள்ளனர். இந்நிலையில், பாரதி கண்ணம்மா சீரியலில் தனது கடைசி நாளை, தன்னுடைய சக நடிகர், நடிகைகள் மற்றும் இயக்குனருடன் ரோஷினி ஹரிபிரியன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.

இந்த வீடியோ தற்போது கண்ணம்மாவின் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. பலர் ரோஷினி சீரியலில் இல்லாததை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.