• Thu. Oct 31st, 2024

தார் பாலைவனத்தில் தல அஜித் – வைரலாகும் புகைப்படம்

Oct 25, 2021

தல அஜித் கடந்த சில நாட்களாக வட இந்திய சுற்றுப்பயணம் செய்து வருகிறார். பைக்கில் அவர் சுற்றுப்பயணம் செய்துவரும் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

குறிப்பாக இந்தியா பாகிஸ்தான் எல்லையான வாகா எல்லையில் இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரல் ஆனது.

மேலும் நேபாளம் உள்பட பல பகுதிகளுக்கு தல அஜித் சுற்றுப் பயணம் செய்துள்ள நிலையில் தற்போது அவர் தார் பாலைவனத்தில் சுற்றுப்பயணம் செய்து வருவதாக தெரிகிறது.

தார் பாலைவனத்தில் பைக்கை ஓரிடத்தில் நிறுத்திவிட்டு பைக்கில் சாய்ந்து கொண்டு தண்ணீர் குடிப்பது போன்ற அஜித்தின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.