• Fri. Apr 18th, 2025

எதற்கும் துணிந்தவன் படத்தின் புதிய அப்டேட்

Jan 14, 2022

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘எதற்கும் துணிந்தவன்’. இந்தப் படத்தின் நாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். மேலும் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, இளவரசு, சுப்பு பஞ்சு, திவ்யா துரைசாமி, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் சூர்யாவுடன் நடித்துள்ளனர்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் பிப்ரவரி 4ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ‘வாடா தம்பி…’ 2வது சிங்கிள் உள்ளம் உருகுதய்யா.. ஆகிய பாடல்கள் வெளியாகி வைரலானது. இந்நிலையில் அடுத்த பாடலை ஜனவரி 16 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

சும்மா சுர்ருனு என்ற இந்த பாடலை சிவகார்திகேயன் எழுதியுள்ளதுடன் அர்மன் மலிக் மற்றும் நிக்கித்தா காந்தி ஆகியோர் பாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.