• Tue. Sep 10th, 2024

கடந்த இருபது வருடங்களில் இது தான் சிறந்த கதை

Jan 25, 2022

தளபதி 66 படத்தின் கதை தான் சிறந்த கதை என்று விஜய் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் பிரபல நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் பீஸ்ட் திரைப்படம் வெளியீட்டிற்கு தயாராக இருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து தில் ராஜூ தயாரிப்பில் விஜய் நடிக்க இருக்கும் படம் தளபதி 66. பிரபல தெலுங்கு இயக்குனரான வம்சி இந்த படத்தை இயக்க இருக்கிறார்.

இந்நிலையில் விஜய் கடந்த இருபது வருடங்களில் தான் கேட்ட கதைகளில் தளபதி 66 படத்தின் கதை தான் சிறந்தது என்று கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தளபதி ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பை கொடுத்துள்ளது.