
நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் டாப் நடிகராக திகழ்ந்து வருபவர், இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான கடைசி விவசாயி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும் ஏகப்பட்ட திரைப்படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வரும் விஜய் சேதுபதி VJS46 திரைப்படத்தில் பொலிஸ் அதிகாரியாக நடித்து வருகிறார்.
அடுத்தடுத்து விஜய் சேதுபதி திரைப்படங்கள் ரிலீஸிற்கு தயாராகவுள்ளது, அதன்படி விஜய் சேதுபதி இரண்டு முக்கிய படங்களில் ஒரே நாளில் வெளியாக இருக்கிறது.
ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி விஜய் சேதுபதியின் காத்து வாக்குல ரெண்டு காதல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே கமலுடன் விஜய் சேதுபதி நடித்துள்ள விக்ரம் திரைப்படமும் 28 ஆம் திகதி தான் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரும் வரை பொறுத்திருந்து பார்க்கலாம்.