• Wed. Feb 12th, 2025

கிரே மேன் படம் பற்றிய அப்டேட்

Jan 29, 2022

தனுஷ் நடிப்பில் உருவாகும் ஹாலிவுட் படமான கிரே மேன் படம் பற்றிய அப்டேட் வெளியாகியுள்ளது. தனுஷின் அறிமுக ஹாலிவுட் படமான கிரே மேனை நெட்பிளிக்ஸ் மிக அதிக செலவில் தயாரித்துள்ளது.

அந்த படத்தில் அவர் வில்லனாக நடிக்கிறார் என சொல்லப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்புக்காக மார்ச் மாதத்தில் இரண்டு மாதங்கள் அமெரிக்கா சென்று அங்கு காட்சிகளில் நடித்து வந்தார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்து இப்போது பின் தயாரிப்புப் பணிகள் நடந்து வருகிறது.

இந்நிலையில் இந்த படம் ஜூலை 22 ஆம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது.