• Thu. Aug 18th, 2022

வீடு திரும்பிய வடிவேலு- முதல்வருக்கு நன்றி

Jan 1, 2022

நடிகர் வடிவேலு சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற படப்பிடிப்புக்காக லண்டன் சென்றிருந்தார். ஒமைக்ரான் பரவல் அதிகமுள்ள பிரிட்டன் நாட்டிலிருந்து வருபவர்கள் அனைவருக்கும் விதிகள் படி பரிசோதனை செய்ய வேண்டும்.

அதன்படி, கடந்த 23ம் தேதி விமானம் மூலம் வந்த அவருக்கு சென்னை விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

தொற்று உறுதி செய்யப்பட்டவுடன் போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அனுமதிக்கப்படும் போது அவருக்கு தீவிர அறிகுறிகள் ஏதும் இல்லை. இருப்பினும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது.

இந்தநிலையில், கொரோனா பாதிப்பு முழுமையாக குணமடைந்து வடிவேலு வீடு திரும்பினார்.

இதுகுறித்து தெரிவித்த அவர், ‘மக்கள் ஆசீர்வாதத்தால் கொரோனாவிலிருந்து மீண்டு நான் நலமாக உள்ளேன், மூன்று நாட்கள் தனிமையில் இருக்க மருத்துவர் அறிவுறுத்தியுள்ளனர்.

மருத்துவமனையில் இருந்தபோது முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் மா.சுப்ரமணியன் ஆகியோர் என்னிடம் நலம் விசாரித்தனர். ‘என்னிடம் நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோருக்கு நன்றி’ என தெரிவித்தார்.