• Sun. Dec 8th, 2024

வலிமை; விழலாம் பயந்து ஓடக்கூடாது

Dec 15, 2021

வலிமை படத்தின் படப்பிடிப்பின் போது பைக்கில் வீலிங் செய்ய முயன்று நடிகர் அஜீத் வழுக்கி விழும் காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது.

இந் நிலையில் பைக் ஓட்டும் போது ஹெல்மெட் மற்றும் கவச உடை பாதுகாப்பை தரும் என்பதை உணர்த்தவும், தனது ரசிகர்களுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தவும் இந்த காட்சியை அஜீத் வெளியிடச் செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

வலிமை படத்தின் அப் டேட் கேட்ட ரசிகர்களுக்கு அதன் மேக்கிங்கில் தாங்கள் கொரோனா மற்றும் தொழில் முடக்கத்தால் சந்தித்த சோதனைகளை காட்சிகளாக அப்டேட் செய்துள்ளது படக்குழு..!

பைக் சண்டை காட்சிகள் ஒவ்வொன்றும் உயிரை பணயம் வைத்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் ரசிகர்களிடம் வலிமை மீதான எதிர்பார்ப்பை எகிறச்செய்துள்ளது

படத்தின் சண்டை காட்சிக்காக நிஜமாகவே பைக்கில் வீலிங் செய்ய முயன்று அஜீத் சாலையில் வழுக்கி விழும் வீடியோ இடம் பெற்றுள்ளது.

அடுத்த நொடியே வழுக்கி விழுந்த இடத்தில் எழுந்து நடக்கும் அஜீத் மீண்டும் வீலிங் செய்யும் காட்சிகளுடன், அதன் பின்னணியில் மகாத்மா காந்தியின் பொன் மொழி இடம் பெற்றிருந்தது

பைக் ஓட்டும் போது, வீலிங் செய்வதை தவிர்க்க வேண்டும் என்றும், தலைகவசம் மற்றும் கவச உடை ஆகியவை அணிந்து இருந்ததால் பெரிய அளவிலான காயங்களில் இருந்து தப்பியதை ரசிகர்களுக்கு அறிவுறுத்தவே இந்த காட்சியை அஜீத் மேக்கிங் வீடியோவில் இணைத்ததாக தகவல் வெளியாக உள்ளது.