• Sun. Mar 24th, 2024

காளியாக மாறிய வனிதா – வைரலாகும் புகைப்படம்

Jun 30, 2021

வனிதா விஜயகுமார் திரைப்படங்களில் நடித்திருந்தாலும் மிகப் பெரும் அளவில் ரசிகர்கள் மத்தியில் அறிந்திருக்கப்படவில்லை, வனிதாவினை மிகப் பெரிய அளவில் பிரபலப்படுத்தியது என்னவோ பிக்பாஸ் 3 நிகழ்ச்சிதான்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் அவர் குக் வித் கோமாளி மற்றும் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். இந்தநிலையில் சமீப காலமாகத் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பினையும் பெற்று வருகிறார்.

தற்போது கொரோனா ஊரடங்குத் தளர்வில் பிக் பாஸ் ஜோடிகளுக்கான ஷுட்டிங்கானது துவங்கியுள்ளது. வனிதா விஜயகுமார் சுரேஷ் சக்ரவர்த்தி அவர்களுடன் இணைந்து நடனமாடுகிறார் என்பது நாம் அறிந்ததே.

தற்போது பிக் பாஸ் ஜோடிக்காக வனிதா போட்டுள்ள கெட்டப் குறித்த புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகின்றது. அதாவது வனிதா காளி கெட்டப்பில் கோபம் தெறிக்க இருப்பது போல் அந்த புகைப்படத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.